சம்மாந்துறையில் காட்டு யானைகளின் தொல்லையை கட்டுப்படுத்த விஷேட நடவடிக்கை.

(அஸ்ஹர் இப்றாஹிம்)  சம்மாந்தூறை பிரதேச செயலக பிரிவிற்குள் காட்டு யானையின் தொல்லையிலிருந்து பொதுமக்களையும் அவர்களது உடமைகளையும் பாதுகாப்பதற்கான விஷேட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தெரிவித்தார்.
அண்மைக்காலமாக சம்மாந்துறை பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லையால் உயிரிழப்புக்களையும் உடமைகளையும் நிம்மதியையும் இழக்கும் நிலமையை பொதுமக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
காட்டு யானைகளினால் பாதிக்கப்பட்ட இடங்களையும்,  பாதிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட குடும்பத்தினரையும் அண்மையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம பார்வையிட்டதுடன் சந்தித்து கலந்துரையாடினார்.
அதன் பின்னர் காட்டு யானைகளின் தொல்லையிலிருந்து எதிர்காலத்தில் பொதுமக்களையும் உடமைகளையும் பாதுகாக்க யானை வேலி அமைப்பது சம்பந்தமாக மதிப்பீட்டு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு தன்னை பணித்துள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
அந்த வகையில் காட்டு யானைகளின் தொல்லையிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான உரிய பொறிமுறைகளை ஏற்படுத்துவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டப்படவுள்ளது.
இதே வேளை எல்லைக் கிராமங்களில் வாழும் மக்கள் பீதி காரணமாக மாலை வேளைகளில் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று மீண்டும் காலையில் வீடு திரும்பும் நிலமை ஏற்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

20231031_100541.jpg