இந்த நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே,ஜே .முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய சுகாதார வைத்திய அதிகாரியின் கட்டிடத்தை கையளித்தார்.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நீண்ட காலமாக நிரந்தர கட்டிட வசதிகள் இல்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில் சுகாதார அமைச்சினூடாக கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்திட்ட பகுதியில் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் உலக வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட வேலை திட்டங்கள் 12 மில்லியன் ரூபாய் செலவில் பூர்த்தி செய்யப்பட்டு தற்போது இந்த கட்டிடத்தை பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் டி.ஜி. மென்டலின் கொஸ்டா, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், தாய்,சேய் பொறுப்பு வைத்திய அதிகாரியும் கல்முனை தெற்கு சுகாதார முன்னாள் வைத்திய அதிகாரியுமான டொக்டர் . எம்.எச்.றிஸ்வின், திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர்.எம்.சி.எம்.மாஹிர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.