மட்டக்களப்பில் பாடசாலைக்குள் புகுந்து மாணவன் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் நீதிமன்றில் கடமையாற்றம் ஒருவர் கைது

கனகராசா சரவணன்;)

மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல ஆண்கள்  பாடசாலை ஒன்றில் உட்புகுந்து  தனது மகனை தாக்கிய இருமாணவர்களுக்கு பதிலா வேறு ஒரு மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டதில் மாணவன் காயமடைந்த நிலையில் வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் கடமை யாற்றிவரும் ஒருவரை இன்று சனிக்கிழமை (28) கைது செய்துள்தாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையில்  தரம் 9ம் ஆண்டில் கல்விகற்றுவரும் மாணவர் ஒருவர் மீது சக இரு மாணவர்கள் தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவன் தனது பெற்றோரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை  (27)  பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தையாரான  நீதிமன்றத்தில் கடமையாற்றி வருபவர்; பாடசாலைக்குள் புகுந்து தனது மகனை தாக்கிய இரு மாணவர்களுக்கு பதிலாக மாறுதலாக  வேறு ஒரு மணவன் மீது தாக்குதல் நடாத்தியதையடுத்து அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து இடம்பெற்ற விசாரணையின் அடிப்படையில் நீதிமன்றில் கடமையாற்றிவரும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் இன்று சனிக்கிழமை கைது செய்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸ் நிலைய  பெண்கள் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.