(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் சமுக சேவை பிரிவு மற்றும் பிரதேசமட்ட முதியோர் சங்கத்தின் அனுசரனையில் ஏற்பாடு செய்திருந்த முதியோர் தின நிகழ்வு நேற்று (26) திகதி பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில்
இடம்பெற்றது.
ஆரோக்கியமிகு அகவையினை நோக்கி உலகலாவிய சிரேஷ்ட பிரஜைகளுக்கான மனித உரிமைகளை தலைமுறை கடந்து நிறைவேற்றுதல் எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் முதியோர்களினால் பல நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன் முதியவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் அவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், கணக்காளர் சுந்தரலிங்கம் மற்றும் உத்தியோகத்தர்கள் முதியோர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.