இரா. துரைரத்தினத்தின் கிழக்கில் சிவந்த சுவடுகள் நூல்வெளியீடு.

ஊடகவியலாளர் இரா. துரைரத்தினம் அவர்களின் கிழக்கில் சிவந்த சுவடுகள் என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் நவம்பர் 4ம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் செ. பேரின்பராஜா தலைமையில் நடைபெற உள்ள இந்நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.

சிறப்பு அதிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கலந்து கொள்கிறார்.

வரவேற்புரையை ஊடகவியலாளர் கிருஷிகா லிதுர்சன் அவர்களும் அறிமுக உரையை முன்னாள் கோட்ட கல்வி பணிப்பாளர் அ. சுகுமாரன் அவர்களும் நயவுரைகளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கி. துரைராசசிங்கம். பசீர் சேகு தாவூத் ஆகியோரும் நிகழ்த்த உள்ளனர்.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் மட்டு ஊடக அமையம் இணைந்து நடத்தும் இந்நூல் வெளியீட்டு விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ. நிக்சன் சிறப்பு உரையாற்ற உள்ளார்.