மூதூரில் நம்மட படைப்புகள் கண்காட்சி ..!

(அ . அச்சுதன்)

மூதூரில் ஜே.எம்.ஐ நிறுவனத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட
‘நம்மட படைப்புகள்கண்காட்சி’ நேற்று ஆரம்பமானது.
காலை நிகழ்வுபளை மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி முனவ்ரா நளீம் அவர்கள்  தொடங்கிவைத்தார்.
பகல் நிகழ்வுகளை கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டு அலுவல்கள் மாகாணப் பணிப்பாளர்  சி.நவநீதன் தொடங்கி வைத்தார்.
மாலை நிகழ்வுகளை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குரேந்திரகுமார் அவர்கள் தொடங்கி வைத்தார்.
 கண்காட்சியில் :
1. மூதூரைச் சேர்ந்ந படைப்பாளிகளின் நூல்களின் கண்காட்சி
2. மூதூர் ஓவியர்களின் ஓவியக் கண்காட்சி
3. மூதூர் அசையாப்படப் பிடிப்பாளர்களின் அசையாப்படங்களின் கண்காட்சி
4. அருங்காட்சிப் பொருட்களின் கண்காட்சி
5. மூதூர் படைப்பாளிகளின் குறுந்திரைப்படங்களின் காட்சிகள்
6. வானொலி கலையகச் செயற்பாடுகள்.
7. தேடோடி நூல் வெளியீட்டு நிகழ்வு
என்பன சிறப்பாகவே இருந்தன.