ஓய்வுபெறும் விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர் அக்பருக்கு பிரியாவிடை

( வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகராக நீண்டகாலம் கடமையாற்றி ஓய்வு பெறும் எஸ்.எல். அக்பருக்கு நேற்று(25) புதன்கிழமை பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது.
 ஓய்வு நிலைக்கு செல்லும் நிகழ்வு வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா முன்னிலையில்  இடம்பெற்றது.
பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான மஜீட் ,அரபாத், நிலோபரா மற்றும் உதவிக்கல்விப் பணிப்பாளர் பி.பரமதயாளன் உள்ளிட்ட கல்வி சார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
ஓய்வு பெறும் ஆசிரிய ஆலோசகர் அக்பர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
வலய கல்விசார் உத்தியோகத்தர்கள் நலன்புரி சங்க தலைவர் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா சிறப்புரையாற்றினார்.
ஆசிரிய ஆலோசகர்களான மன்சூர் றயிஸ்டீன் ஆகியோரும் உரையாற்றினர்.