தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடக பேச்சாளர் க.சுகாஸ் தெரிவிப்பு
(கனகராசா சரவணன்;)
மட்டு மேச்சல் தரை பகுதியில் அத்துமீறி குடியேறிய சிங்களவர்களை வெளியேற்றுவது தொடர்பாக இதுவரை ஜனாதிபதியிடமிருந்து எதுவிதமான அறிவித்தலும் இதுவரை வரவில்லை என கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளதாகவும் எனவே எதற்காக மக்களை ஏமாற்றுகின்றீர்கள், ஏன் பொய்களை கூறுகின்றீர்கள், என தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை பண்ணையாளர்களின் 36 வது நாள் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் பங்கேற்றுக் கொண்டதுடன் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற பேது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மயிலத்தமடு தமிழ் பண்ணையாள்களின் வாடியில் இருந்த உடமைகள் கடந்த 13ம் திகதி எரிக்கப்பட்டதுடன் இதுவரை ஆயிரத்துக்கு அதிகமான மாடுகள் கொலை செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் வாடியில் உடமைகள் எரிக்கப்பட்ட சம்பவம் பொலிசார் பாதிக்கப்பட்ட பண்ணையாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததையடுத்து அவரை அழைத்துக் கொண்டு கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளித்திருந்தோம் இந்த விடயம் நடைபெற்று இன்றுவரை ஒரு சந்தேக நபர் கூட கைது செய்யப்படவில்லை
இந்த நிலையில் கரயனாறு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் மயிலத்தமடு மேச்சல் தரையில் இருந்து அத்துமீறிய சிங்கள குடியேற்ற வாசிகளை வெளியேற்றுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளது தொடர்பாக பேசியிருந்தேன் அப்போது அவர் ஜனாதிபதியிடமிருந்து எந்தவிதமான அறிவித்தலும் வந்திருக்க வில்லை என தெரிவித்தார்.
ஆகவே இந்த சாதாரண விடையத்துக்கு கூட இதுவரை நீதி கிடைக்கவில்லை எனவே அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் பிள்ளையான் ,கருணா, வியாழேந்திரன், அங்கயன், டக்கிளஸ் போன்றவர்களே இந்த பிரச்சனையை தீர்க்கமுடியாத நீங்கள்தான் யாழ்ப்பாணத்தையும் மட்டக்களப்பையும் சிங்கபூராக மாற்ற போகின்றீர்களா?
எனவே எதற்காக மக்களை ஏமாற்றுகின்றீர்கள், ஏன் பொய்களை கூறுகின்றீர்கள், இந்த கால்நடைவளர்ப்பாளர்களான பண்ணையாளர்கள் அப்பாவிகள் இந்த பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்கும்வரை நாங்கள் குரல்கொடுத்துக் கொண்டிருப்போம் ஓயப்போவதில்லை. என்றார்.