மன்னாரிலும் ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

(தலைமன்னார் விஷேட நிருபர் வாஸ் கூஞ்ஞ)  வடக்கு கிழக்கு மாகாண பங்குகளில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் மன்னார் மாவட்டத்திலும் அனுஷ்டிக்கப்பட்டது
மன்னார் மாவட்டத்தில் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாத போதும் வடக்கு மாகாணம் தவிர்ந்த வேறு மாவட்டங்களுக்கான தூர தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெற்றது
உணவு கடைகள் உட்பட்ட பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
இதனால் மக்கள் போக்குவரத்து மற்றும் நடமாட்டங்கள் மிகவும் குறைவாக காணப்பட்டது
வர்த்தக கடைகள் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டமையால் மன்னார் மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.