கிழக்கு மாகாண பணிப்பாளராக நௌபீஸ் கடமையேற்பு.

(அபு அலா)கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி பிரிவின் மாகாணப் பணிப்பாளராக என்.எம்.நௌபீஸ் இன்று (20) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 5 ஆண்டு காலமாக கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள மாகாணப் பணிப்பாளராக மிகத் திறமையாக செயற்பட்டு வந்த இந்நிலையில், கிழக்கு மாகாண அளுநர் செந்தில் தொண்டமானினால் வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி பிரிவின் மாகாணப் பணிப்பாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.