அமெரிக்க காட்டர் சென்டர் பிரதிநிதிகளுக்கும் இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு

ஹஸ்பர்_
  1. அமெரிக்க காட்டர் சென்டர்  பிரதிநிதிகளுக்கும் இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய (18)தினம் கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பின்போது நடைபெற இருக்கும் தேர்தல்களின் போது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதே போன்று வாக்காளர்களை அறிவூட்டக்கூடிய நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. குறித்த சந்திப்பில் கபே அமைப்பு சார்பாக அதன் நிறைவேற்று பணிப்பாளர் மன்னாஸ் மக்கீன் மற்றும் சட்டத்துறை பணிப்பாளர் ஹரேந்ர பானகல மற்றும் காட்டர் சென்றர் பிரதிநிதிகளான சஹிரா சகீட், தாரா செரீப்,மார்க் ஸ்டீவன்,தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களான சீஎம்இ,பெப்ரல்ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெசனல்,ஐரெக்ஸ் ஆகியவற்றை சேர்ந்தோரும் கலந்து கொண்டனர் .