(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
மட்டக்களப்பு மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் சியாஹூல் ஹக் தலைமையில் மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் (18) இடம் பெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மத்தியஸ்த சபை இணைந்து ஒழுங்குபடுத்தியிருந்த இந் நிகழ்வில் “எமது பிணக்குகளை மத்தியஸ்தம் ஊடாகத் தீர்த்துக்கொள்வோம்” எனும் தொனிப்பொருளில் இடம் பெற்றது.
மகிழ்ச்சியான குடும்பம் மற்றும் சமூகத்தை கட்டியெழுப்புவது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் பயிற்றுனருக்கான பயிற்றுவிப்பாளர் துரைசாமி நகுலோஸ்வரனினால் வழங்கப்பட்டன.
சமூகத்தில் காணப்படும் நடைமுறைப் பிணக்குகளை நடுநிலையாக கையாளுதல் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன்,
மக்கள் மத்தியில் காணப்படும் சிவில் பிணக்குகளை நீதிமன்றத்திற்கு செல்லாமல் மத்தியஸ்தம் மூலம் தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பை விரிவுபடுத்துவற்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் தொடர்பாக இங்கு காட்சிப் படுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் மண்முனை வடக்கு மத்தியஸ்த சபை தவிசாளர் எஸ்.விஷ்ணுமூர்த்தி, மண்முனை வடக்கு கிராம நிர்வாக உத்தியோகத்தர் கே.ராஜன், சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.பிரின்சி, ‘இளைஞர் கழக உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.