இ.கி.மிசன் மடத்தில் நவராத்திரி விழா

( வி.ரி. சகாதேவராஜா)
ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரமத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஸ்ரீ துர்கா தேவியின் வழிபாடுகள் நேற்று  முதல் ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

கொலு பொம்மைகள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
 இத்துடன் சப்தமி தினத்து அன்று அபிராமி அந்தாதி பாராயணம் நடைபெற உள்ளது.அஷ்டமி தினமாகிய ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் விசேட. பூஜைகள் நடைபெறும், அன்று மாலை நலங்களை சேர்க்கும் திருவிளக்குப் பூஜை நடைபெற உள்ளது. நவமி தினமாகிய திங்கட்கிழமை மாலை லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடைபெறும்,  வழமை போல தசமி தினத்தன்று மாணவர்களுக்கு ஏடு தொடக்கும் வைபவம் நடைபெறும்.