எம்.எஸ்.எம்.ஸாகிர்
கட்டார் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் மபாஸ் மொஹிதீனை, 2023 ஸ்கை தமிழ் விருது குழு, (15) கட்டார் நாட்டுக்கான இலங்கைத் தூதரகத்தில் சந்தித்தனர்.
தூதரக சிரேஷ்ட அதிகாரி ரஷீத் எம். பியாஸ் (நளீமி), ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகையின் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித், ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகையின் முகாமையாளர் அஸ்வர் ரிஸ்வி, தொழிலதிபர், சமூக செயற்பாட்டாளர் யாழினி குமார், என்.சி. நிகழ்வு திட்டமிடல் நிறுவனத்தின் பணிப்பளார் நிர்மலா சண்முகபாண்டியன் ஆகியோர் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தினகரன் மற்றும் வாரமஞ்சரி ஊடக அனுசரணையில் ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் அடுத்த மாதம் (நவம்பர்) 30ஆம் திகதி இந்திய கலாசார மையம் அசோகா ஹோலில் நடைபெறவுள்ள ஸ்கை தமிழ் விருது விழாவிற்கு பிரதம அதிதியாக கட்டார் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் மபாஸ் மொஹிதீனை அழைப்பதற்காக இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பில் விருது விழா சம்பந்தமாக சில ஆலோசனைகளையும் தூதுவர் வழங்கியிருந்தார். இன, மத வேறுபாடின்றி அனைவரையும் இணைத்துக் கொண்டு இதனைச் செயற்படுத்த வேண்டும் என்பதை அவர் அவ்விடத்தில் வலியுறுத்திக் கூறினார்