(எருவில் துசி) களுவாஞ்சிகுடி சாரதா தியேட்டர் வீதியில் 15 10 2023 இன்றைய தினம் மின்கம்பியில் சிக்குண்டு பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
பழுகாமத்தை பிறப்பிடமாகவும் களுவாஞ்சிகுடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நவநீதன் சசிகலா அவர்கள் இன்று தனது வளவில் முருங்கை மரத்தில் முருங்கைக்காய் ஆய்வதற்கு எத்தணித்தபோது முருங்கைக்காய் ஆய்வதற்கு பயன்படுத்திய கொக்கு துரட்டி மின்கம்பியில் விழுந்ததால் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
இவர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் திட்டமிடல் பிரிவில் அபிவிருத்தி உத்தியோத்தராக கடமை ஆற்றும் நபர் ஆவார் இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் காணப்படுவதோடு இவரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், தனது தாய் மரணம் அடைந்த காரணத்தினால் 82 வயதான தனது தந்தை முழுமையாக செயல்பட முடியாத காரணத்தினால் இவரின் கட்டுப்பாட்டில் வைத்து பராமரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இவரின் சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான மேலதிக விசாரணையினை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.