நாமலை எதிர்க்கட்சி தலைவராக்குங்கள்.பொதுஜனபெரமுனவிற்குள் சிலரின் கருத்து.

திரு நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சிக்கு சென்று எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று கருத்து வெளியிட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்க்கட்சியில் அமர வேண்டும் என்றும் இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களும் வெளியாகியுள்ளன.

பொதுஜன பெரமுனவின் அரசியல் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு இந்த நேரத்தில் கடுமையான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த எம்பிக்கள் குழு கருத்து தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பொதுஜன பெரமுன எதிர்கட்சியில் அமர்ந்தால் அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தற்போது அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பது பொருத்தமானதல்ல எனவும் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.