மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் 2022 மற்றும் 2023 ஆண்டிற்கான ஆசிரிய  பயிலுனர்களை வரவேற்கும் நிகழ்வு.

 (எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் புதிய பயலுனர் ஆசிரியர்களுக்கான பதிவு மற்றும் உளீர்ப்பு நேற்று (12) திகதி வியாழக்கிழமை மட்டகளப்பு தேசிய கல்விக் கல்லூரியில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி த.கணேசரத்தினம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உப பீடாதிபதிகள், விரிவுரை இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள் கல்லூரியின் உத்தியோகத்தர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.இலங்கையின பல பாகத்திலிருந்தும் ஆரம்பக் கல்வி, நாடகமும் அரங்கியலும், சமூக விஞ்ஞானம், சித்திரக் கலை, கணிதம், இலத்திரனியல் தொழில்நுட்பவியல், தமிழ் மொழி இலக்கியம், சுகாதாரம் உடற்கல்வி, விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளுக்கான 381  ஆசிரியப் பயிலுனர்கள் தெரிவு செய்யப்பட்டு கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சேர்த்துக் கொள்ளப்பட்ட பயிலுணர்கள் இரண்டாம் வருட ஆசிரியர் பயிலுணர்களால் வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.