தனக்காக வாழாது தன் இனத்தின் விடிவுகாய் வாழ்ந்தவர் பொன்.செல்வராசா.

( வி.ரி.சகாதேவராஜா)  தனக்காக வாழாது தன் இனத்தின் விடிவுகாய் இதுவரையும் செயல் பட்டு ஈழத்தின் ஏக்கத்தோடு இன்று உங்கள் மூச்சி ஓய்ந்து விட்டது ஐயா. ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவாவாறு இலங்கை தமிழரசு கட்சியின் காரைதீவு கிளை தலைவரும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ண பிள்ளை ஜெயசிறில் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
              மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான பொன் செல்வராசா  நேற்று உடல் சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.
அவரது மறைவு தொடர்பாக மேலும் ஜெயசிறில் தெரிவிக்கையில்..
எமது அம்பாறை மாவட்டத்தின் பல செயற்பாடுகளையும்,செயல் திட்டங்களையும் முன்னெடுத்த அக்கறை மிகுந்த ஒருவர்.  உரத்த குரலில்  எதிரியை  பதற வைத்த குரல் ஓய்ந்தது. இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் எதிர்காலத்தில் பல இளைஞர்கள் உள்வாங்கப்பட வேண்டும் வீர மண்ணின் விடுதலைக்காய் இறுதி வரை செயல்பட்டவர். தமிழ் தேசியத்தின் பாசறையில் வெற்றி பெற உழைத்தவர். தனக்காக வாழாது தன் இனத்தின் விடிவுகாய் இதுவரையும் செயல் பட்டு ஈழத்தின் ஏக்கத்தோடு இன்று உங்கள் மூச்சி ஓய்ந்து விட்டது ஐயா. தமிழர் தாயகம் தமிழர்களுடைய கையை மீறி போகக்கூடாது என்பதற்காக பல அழைப்புக்களை எடுத்து பேசி ஒவ்வொரு விடயமாக ஆலோசனை வழங்கிய ஒருவர் . அவரது கருத்துக்கள் எப்போதுமே பொன்னானதாகவே இருக்கும். ஆயுதமுனைக்கும் அடக்குமுறைக்கும் அடிபணியாது செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்ற ஒரு இளைஞனை போன்று செயல்படும் ஒரு சிறந்த வீரர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.