மட்டக்களப்பில் 59இலட்சத்திற்கு விமானச்சீட்டு.கனடாபோலி முகவர் கைது.

கனகராசா சரவணன்

மட்டக்களப்பில் கனடாவுக்கு அனுப்புவதாக 59 இலச்சத்து 35 ஆயிரம் ரூபாவை வாங்கி கொண்டு போலி விமானச்சீட்டை வழங்கி மோசடியில் ஈடுபட்ட களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த போலி வெளிநாட்டுமுகவர் ஒருவரை இன்று புதன்கிழமை (11) கைது செய்துள்ளதாக மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஒருவரிடம் அவரை கனடா நாட்டுக்கு அனுப்புவதாக களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த போலி வெளிநாட்டு முகவர் ஒருவர் 59 இலச்சத்து 35 ஆயிரம் ரூபாவை வாங்கு கொண்டு இந்த அந்த அனுப்புவதாக இழுத்தடித்து வந்துள்ள நிலையில் கடைசியாக கனடாவிற்கான போலி விமான சீட்டை வழங்கி கனடாவிற்கு அனுப்பாது ஏமாற்றிவந்துள்ளார்

இதனையடுத்து பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு போலி முகவருக்கு எதிராக மட்டு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து தலைமறைவாகியிருந்த போலி முகவரை விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் களுவங்கேணியில் வைத்து இன்று புதன்கிழமை கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவர் 40 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.