மன்னார் மாவட்டத்தில் பாம்பரிய கலைகள் அருகிச் செல்லாது இருக்கும் நோக்குடன் இயங்கி வரும் விழிகள் கலாமுற்றம் இதன் ஒரு பகுதியாக கவிஞர் ஆனந்தன் லியோன் எழுதிய ‘எறும்பு விட்ட வினாத்தாள்’ என்ற கவிதைத் தொகுப்பு புத்தக வெளியீட்டு விழாவை சனிக்கிழமை (07) நடாத்தியது.
விழிகள் கலாமுற்றம் இயக்குனர் ‘சாஹித்தியா’ எஸ்.ஏ.உதயன் தலைமையில் பேசாலை மன்.புனித மரியாள் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ,
மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பேசாலை பங்குத் தந்தை அருட்பணி செபமாலை அன்ரனி அடிகளார் , ஓய்வுநிலை அதிபர் அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லாஸ் . வைத்திய கலாநிதி கில்றோய் பீரிஸ் , வெளிநாட்டு அலுவலக அமைச்சின் உதவிப் பணிப்பாளர் திருமதி நிஷாந்தினி சுரேன் நாத் மற்றும் மடு பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி வாசுகி சுதாகர் ஆகியோருடன் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கவிதை நூலின் முதல் பிரதியை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பேசாலை பங்குத் தந்தை அருட்பணி செபமாலை அன்ரனி அடிகளாரக்கு வழங்கி ஆரம்பித்து வைத்தார்.