மன்னார் மாவட்டத்தின் சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்துக்குள் இருக்கின்றோம். இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார்

( வாஸ் கூஞ்ஞ)  சர்வதேச சமூகம் இயற்கையை பாதுகாக்கின்ற அதுவும் காலநிலை மாற்றங்களை குறித்து தீவிர அக்கறைக் காட்டுகின்ற நிiலையில் இருக்கின்ற வேளையில் நாம் மன்னார் மாவட்டத்தின் சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்துக்குள் இருக்கின்றோம் என மன்னார் கறிற்றாஸ் வாழ்வோதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் இவ்வாறு தனது ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.

மன்னார் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செபமாலை அன்ரன் அடிகளார் தலைமையில் வாழ்வுதயத்தில் திங்கள் கிழமை (09) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையும் கலந்து கொண்டார்.

இதன்போது வாழ்வோதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் இங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்

‘இயற்கை வளங்களை பாதுகாப்போம்’ என்ற கருப்பொருளில் இன்று (09) நாங்கள் இந்த ஊடகச் சந்திப்பை  நடாத்துகின்றோம்.

சர்வதேச சமூகம் இயற்கையை பாதுகாக்கின்ற அதுவும் காலநிலை மாற்றங்களை குறித்து தீவிர அக்கறைக் காட்டுகின்ற நிiலையில் இருக்கின்றது.

இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் போன்றவற்றை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தற்பொழுது உணரப்பட்டுள்ளது.

கறிற்றாஸ் ஸ்ரீலங்கா செடெக் நிறுவனமானது ஜேர்மனியில் இருக்கின்ற ‘மிசெரியோ’ என்ற நிறுவனதத்pன் நிதி உதவியைப் பெற்று மன்னார் மாவட்டத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

இத்திட்டமானது 2022 , 2023 ஆம் ஆண்டுக்கான நிதியாக எமக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வோதயம் ‘இயற்கை வளங்களை பாதுகாப்போம்’ என்ற திட்டத்தினை மன்னார் மாவட்ட செயலகம் . பிரதேச செயலகங்கள் வன ஜீவராசி திணைக்களம் , சூழல் அதிகார சபை . நகர சபை மற்றும் வன வள திணைக்களங்களோடு இணைந்து இதன் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இத்திட்டமான மன்னார் மாவட்டத்தில் ஒன்பது கிராமங்களில் அதாவது கீரி , சவுத்பார் , காத்தான்குளம் பாலைப்பெருமான்கட்டு .மற்றும்  முசலி பிரதேசத்தில்  வேப்பங்குளம் , மடுக்கரை , தம்பனைக்குளம் . பண்ணை வெட்டுவான் மற்றும் மடு ரோட் ஆகிய பகுதிகளில் செயல்படுத்தி வருகின்றது.

இக் கிராமங்கள் தெரிந்தெடுத்தமைக்கு காரணம் இப்பகுதியில் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு வருகின்றள.

இந்த திட்டத்தின் மூலம் சுற்றாடாலைச் பாதுகாக்க சமூகத்தினை பங்கேற்கச் செய்வதும் அவர்களை இதில் ஈடுபடச் செயள்வதுடன் ஒவ்வொரு கிராமங்களிலும் சிறுவர் பெரியோர் யாவரையும் சுற்றுச் சூழலை பாதுகாக்க குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டு வருவதற்காக கருத்தமர்வுகள் சுற்றுச் சூழல் தொடர்பான பயிற்சிகள் போன்ற  செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக தீவுப் பகுதியில் காற்றாலை மற்றும் கனியவள மணல் அகழ்வு இவற்றால் மரங்கள் காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் இத்தீவு மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் தீவு தற்பொழுது கடல் மட்டத்திலிருந்து தாழ்வான பகுதியாக காணப்பட்டுள்ளமையால் விரைவில் மன்னார் தீவு அழியும் ஆபத்தும் தோன்றியுள்ளது.

தற்பொழுது இங்குள்ள மக்களின் வாழ்க்கை வாழ்வாதாரம் யாவும் அழிந்து செல்வது தற்பொழுது கண்கூடாக இருக்கின்றது.

ஆகவே சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அதிகாரிகளும் மக்களையும் மண்ணையும் பாதுகாத்து மக்கள் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று எங்கள் வேண்டுகோளாக இருக்கின்றது.

ஆகவே அடுத்த வருடமும் நாங்கள் தொடர்ந்து இந்த சுற்றுச் சூழலை பாதுகாக்கும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இருக்கின்றோம்.

அகவே அரசு மற்றும் யாவரின் ஒத்துழைப்பு எமக்கு அவசியமாகிறது என மன்னார் கறிற்றாஸ் வாழ்வோதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் இவ்வாறு தனது ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.