( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவுப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் தினம் தினம் அதிகரித்து வருகிறது.
அறுவடையை அடுத்து நேற்று(9) அதிகாலை புகுந்த தனியன் யானை காரைதீவு வயலை அண்டிய பிரதேசத்திலுள்ள களஞ்சியசாலையை துவம்சம் செய்தது.
சிரேஸ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் சா.வேல்முருகுவின் களஞ்சிய சாலையிலுள்ள நெல்மூடைகளை யானை பதம் பார்த்தது.
இதன்போது மதில்கள் உடைக்கப்பட்டன. தென்னை வாழைகள் துவம்சம் செய்யப்பட்டன.
இவ்வாறு தினமும் யானை மனித மோதல் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.