திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கருத்தரங்கு.

(க.ருத்திரன்) கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 5 புலமைப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டி கருத்தரங்கு அண்மையில்  நடைபெற்றது.

இலங்கை பாதுகாப்புப் படையணி கிழக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களின் வழிகாட்டலில்  23 ஆவது படையணியின் மேஜர் ஜெனரல் நிலன்த பிரேமரத்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ் 232 ஆவது படையணிக்குரிய 12 அவது இலங்கை வேலைத்திட்டத்தின் கீழ் இந்னுமொரு அங்கமாக 2023இல் 5 ஆம் தர புலமைப் பரீட்சையில் தோற்றவுள்ள 18 பாடசாலைகளை உள்ளடக்கிய 119 மாணவர்களுக்கு இவ் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒரு வளமான நாட்டின் எதிர்காலம் குழந்தைகளுக்கு அவர்களின் அறிவு திறமை மற்றும் அணுகு முறைகளை வளர்ப்பதன் மூலம்  நல்லதொரு நாட்டினை கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளையும் உள்ளடக்கியதான பல வித சமூகப்பாதுகாப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தபட்டு வருகிறது.
அந்த வகையில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குதல்,சகல பரீட்சைகளையும் இலக்காக் கொண்டு கருத்தரங்கு நடாத்துதல் மது ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடாத்துதல், விளையாட்டு போட்டிகள் நடாத்துதல்,உலக சிறுவர் தினம் போன்ற சர்வதேச வேலைத்திட்டங்களை நடாத்துதல் மற்றும் பாடசாலை பாடங்கள் உள்ளடங்கும் விதமாக பிரத்தியேக வகுப்புக்களை நடாத்துதல் போன்ற விடயங்கள் திட்டபிடப்பட்டுள்ளது.
இதில் ஒரு அங்கமாக கல்குடா கல்வி வலயத்தில் காணப்படும் கஷ்ட பிரதேச பாடசாலைகளில் 18 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு இக் கருத்தரங்கு இன்று மாணவர் மத்தியில நடாத்தப்பட்டு வருகிறது.
இன்றைய நிகழ்வில் சிவில் சமூக செயற்பாட்டு அதிகாரி லெப்ரினட் கேணல் வி.எம்.இந்துனில் பாலசூர்யா, 12 ஆவது இலங்கை தேசிய படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் சந்தன வன்னிநாயக்க,திகிலிவெட்டை பாடசாலை அதிபர் ஏ.பாலமுரளிதன்,ஆசிரிய ஆலோசகர்கள் திருமதி கனகரெத்தினம்,மற்றும் திருமதி அருளேந்திரன் ஆகியோர்கள் பங்குபற்றியிருந்தனர்.