(திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு) அம்பாரை மாவட்ட திருவதிகை கலைக்கூடத்தினால் மகாகவி பாரதியாரின் 141ஆவது ஜனன தின நுற்றாண்டு விழாவை முன்னிட்டு திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள உயர்தர மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள் நேற்று இடம்பெற்று இருந்தன.
இவ் கலை இலக்கியப் போட்டியானது அம்பாரை மாவட்ட திருவதிகை கலைக்கூடத்தினால் நடாத்தப்பட்டு இருந்தது கலைக்கூடத்தின் உபதலைவர் எஸ்.பி.நாதன் அவர்களின் நெறிப்படுத்தலில் இவ் போட்டிகள் நடாத்தப்பட்டு இருந்தது.
திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள பொத்துவில் ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் கல்விக் கோட்டங்களை உள்ளடக்கிய 12 பாடசாலைகளின் மாணவ மாணவிகள் பங்கு கொண்டு இருந்ததுடன் பாரதியாரைப் பற்றிய கருப்பொருளைக் கொண்டு கவிதை, கட்டுரை மற்றும் பாடல் இசைத்தல் போட்டிகள் என்பன இடம்பெற்று இருந்தன.
இவ்போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு மார்கழி மாதம் இடம்பெறவுள்ள பாரதியாரின் 141ஆவது ஜனன தின நூற்றாண்டு விழாவின் போது முறையே 5000, 3000, 2000 என பணப் பரிசில்களும் சான்றிதழ்களும் திருவதிகை கலைக்கூடத்தினால் வழங்கி வைக்கப்படவுள்ளதுடன் அன்றைய தினம் வெளியிடவுள்ள திருவதிகை ஆன்மிக இலக்கிய சஞ்சிகையிலும் வெற்றி பெற்ற மாணவர்களின் ஆக்கங்கள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.