அகில இலங்கை கர்நாடக சங்கீத மாகாண மட்ட போட்டியில் மட்டு மேற்கு மாணவர்கள் சாதனை

அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை கர்நாடக சங்கீத மாகாண மட்ட போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தை சேர்ந்த சி.மாதங்கி வீணை தனி இசை (மேற்பிரிவு)-முதலாம் இடத்தினையும், ம.கதுக்ஷனா வீணை தனி இசையில் முதலாம் இடத்தினையும் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகி உள்ளனர்.

இவ் வெற்றி மாணவர்களையும், இவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியை திருமதி.மதுமிதா பிரதீபன் ஆசிரியையும், அதிபர், பிரதி அதிபர், உதவிய ஏனைய ஆசிரியர்கள், பாடசாலைச் சமூகம் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் மாணவர்கள் வீணை தனி இசை போட்டியில் வெற்றி பெறுவது இதுவே முதன்முறை என்பதும் எடுத்துக்காட்டத்தக்கதாகும்.