கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 26 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

(ஏறாவூர் நிருபர் நாஸர்)

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 26 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா வந்தாறுமூலை வளாகத்திலுள்ள நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் 07.10.2023 நடாத்தப்படுகிறது.

இப்பட்டமளிப்பு விழாவில் ஏறத்தாழ 1760 உள்வாரி, வெளிவாரி, கலாநிதி மற்றும் பட்டப்பின்படிப்பு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

 

இப்பட்டமளிப்பு விழாவில் ஏறத்தாழ 1760 உள்வாரி, வெளிவாரி, கலாநிதி மற்றும் பட்டப்பின்படிப்பு பட்டங்கள் வழங்கப்படுகின்றன.

 

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா தலைமையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

 

முதலாவது நாளில் முதல் அமர்வில் ஒரு கலாநிதிப்பட்டம், 05 விஞ்ஞான கல்வியில் முதுமாணி, விவசாய விஞ்ஞானத்தில் 14 முதுமாணி, ஓர் கல்வியியல் முதுமாணி, 12 கலை முதுமாணி, 8 வியாபார நிர்வாக முதுமாணி, 13 அபிவிருத்தி பொருளியல் முதுமாணி,  முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பட்டம் ஒன்று மற்றும் 213 இளங்;கலைமாணி (வைத்தியமாணி, சத்திரசிகிச்சைமாணிஇ தாதியியல் விஞ்ஞானமாணி, சித்தமருத்துவம் – சத்திர சிகிச்சை இளமாணி, சிறப்பு விவசாய விஞ்ஞானமாணி போன்றவை வழங்கப்பட்டன..

 

வணிக நிர்வாகமாணி, சிறப்பு வணிக நிர்வாகமாணி, சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் சிறப்பு வணிக நிர்வாகமாணி, வணிகவியல்மாணி, சிறப்பு வணிகவியல்மாணி, கணக்கீடு மற்றும் நிதியியல் சிறப்பு வணிகவியல்மாணி,  முகாமைத்துவத்தில் விஞ்ஞானமாணி, கணக்கியல் மற்றும் நிதி முகாமைத்துவத்தில் விஞ்ஞானமாணி,  தகவல் முகாமைத்துவத்தில் விஞ்ஞானமாணி, மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்பு வணிக  நிர்வாகமாணி, வியாபார முகாமைத்துவத்தில் விஞ்ஞானமாணி என 274 பட்டங்களும் மற்றும் விஞ்ஞானமாணி, நுண்கலைமாணி – இசை, நுண்கலைமாணி – நடனம், நுண்கலைமாணி – நாடகமும் அரங்கியலும், நுண்கலைமாணி – கட்புலமும்; தொழிநுட்பவியல் கலையும் எனும் வகையில் 318 பட்டங்கள் முதலாம் நாளில் 2வது, 3வது அமர்வுகளில் வழங்கப்படுகிறது.

இரண்டாம் நாளில் கல்விமாணிகலைமாணி (விசேட மற்றும் பொதுப்பட்டம்எனும் வகையில் 251 பட்டங்களும் கலைமாணி (விசேட மற்றும் பொதுப்பட்டம்), பிரயோக பௌதீகவியல் மற்றும் இலத்திரனியல் விஞ்ஞானமாணிகணினி விஞ்ஞானமாணி எனும் வகையில் 338 பட்டங்களும்விவசாய தொழில்நுட்பம் மற்றும் முயற்சியாண்மையில் உயிர்முறைமைகள் தொழில்நுட்ப கௌரவ இளமாணிதொடர்பாடல் கற்கைகளில் கலைமாணிமொழியில் கலைமாணிவியாபார நிர்வாகமாணி (வெளிவாரி), வியாபார முகாமைத்துவமாணி (வெளிவாரிஎனும் வகையில் 311 பட்டங்கள் பட்டதாரிகளுக்கு வழங்கப்படவுள்ளன.