கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளராக திருமதி சுஜாத்தா-குலேந்திரகுமார் இளம் வயதில் தெரிவு செய்யப்பட்டதென்பது திணைக்களத்தில் தேங்கிக் கிடக்கும் வேலைகளை நிவர்த்தி செய்யும்.
கிழக்கு மாகாண சபையின் கீழ் மிகப் பாரிய பெரிய அமைச்சு கல்வி அமைச்சாகும். இவ் அமைச்சின் கீழ் கல்வித்திணைக்களத்தின் பணிப்பாளர் நியமனம் என்பது மிகவும் கூடிய ஆளணி, கூடிய நிதி ஒதுக்கீடு, கூடிய வேலைப் பழு, அரைகுறை வேலைகள், முற்றுப்பெறாத வேலைகள், நேரடியாக சமூகத்துடன் சம்மந்தப்பட்ட வேலைகள் அதிகமாக உள்ள திணைக்களம் கல்வித் திணைக்களமாகும்.
தொடர்ச்சியான, ஆரோக்கியமான தொழிற்சங்கங்களின் விமர்சனங்களுக்கும் இத் திணைக்களம் முகம் கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பல வேலைப் பழுக்களை சுமந்து இருக்கும் திணைக்களமானது சமூகத்துடன் நேரடியாக தொடர்பு பட்டவையாகும். சமூகம். பன்முகத்தன்மை கொண்டதாகவும், பலமொழி, பல மதம், பல கலாசாரங்களைக் கொண்ட கல்விப் புலம் தொடர்பாக குறிப்பிட்ட அறிவும் சமூகத்திற்கு உண்டு
இந்தச் சூழ்நிலையில் இத் திணைக்களமானது தகவல் தொழில் நுட்பம். முந்தயடித்துக் கொண்டு உச்ச நிலையில் இருப்பதால் கல்விச் சமூகத்தில் ஒவ்வொருவரையும் தகவல் தொழில் நுட்பம் வழி காட்டும் சூழலில் உள்ளதால் வழி நடத்துபவர்கள் திறமையற்றவர்களாக இருந்தால் கல்விச் சமூகம் தூக்க நிலைக்குச் செல்லும்.
இப்படிப்பட்ட சூழலில் மிகவும் திறமையான ஆளுமை மிக்க கல்வி பட்டப் படிப்புக்களில் பல திருப்பு முனையை ஏற்படுத்திய இளம் வயதுடைய, ஆற்றல் உடைய கல்விப் பெறுபேறுகளில் பல சாதனைகள் புரிந்த பணிப்பாளார் ஒருவர் நியமிக்கப் பட்டதென்பது கல்விச் சமூகத்திற்கு பெருமை சேருவதோடு, மாகாணத்திற்கும் பெருமை சேர்க்கும். இதேவேளை அரசியல் சாயங்கள் பூசப்படாமல் இருப்பதற்கு இப் பணிப்பாளர் வழி வகுக்க வேண்டும்.
நகரப்புறத்தில் பணிப்பாளராக இருந்து மிகவும் திறமையான மாணவர்களைக் தெரிவு செய்து கற்பிக்கும் பாடசாலையில் அதிபராக இருந்து திறமைக்குள் தனது திறமையினால் திறமை உள்ளவர்களை வழி நடாத்தி கூடிய மாணவர்களை திறமைச் சித்திற்குள் கொண்டு வந்த சாதனை அவரைச் சாரும்.
இதேவேளை இது மாவட்டத்தில் எத்தனை வீதம் என உற்று நோக்கும் போது நாம் இன்னும் கல்விச் சேவைக்கு எவ்வளவு சேவை ஆற்ற வேண்டும்.
இப் பணிப்பாளரின் திறமையை கல்விச் சமூகம் பயன்படுத்துவதோடு, அவருக்கு ஊக்கங்களையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கி முன்னேற்றகரமாக இத் திணைக்களத்தில் நிருவாகக் கட்டமைப்போடு சம்மந்தப்பட்ட வேலைகள், மாகாண மட்ட வேலைகளுடன், வலயம், கோட்டம், கிராமம் போன்ற திணைக்களத்திலுள்ள தேங்கிக் கிடக்கும் வேலைகளை ஆளுமை உள்ள பணிப்பாளர் செய்து முடிப்பார் என மு.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.