நிந்தவூரில் மோட்டார் சைக்கிள் திருடியநபர்கள்  கைது 4 மோட்டார்சைக்கிள் மீட்பு.

(கனகராசா சரவணன்)   அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் வீடு ஒன்றின் முன்னால் நிறுத்திவைத்துவிட்டு வீட்டிற்கு வாண்ம் தீட்டிக் கொண்டிருந்த ஒருவரின் மோட்டர்சைக்கிளை திருடிச் சென்ற வாழைச்சேனை பிறைந்துறைச்சேனையைச் சேர்ந்த 3 பேரை நேற்று புதன்கிழமை (04) கைது செய்ததுடன் திருடப்பட்ட மோட்டர் சைக்கள் உட்பட 4 மோட்டர் சைக்கிள்களை கராச் ஒன்றில் இருந்து மீட்டுள்ளதாக நிந்தவூர் பொலிசார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒருவர் கடந்த 27ம் திகதி  நிந்தவூர் பிரதேசத்தில் வீடு ஒன்றிற்கு வர்ணம் தீட்டுவதற்காக மோட்டர்சைக்கிள் சென்று அதனை வீட்டின் வெளி மதில்பகுதியில் நிறுத்திவிட்டு வாண்னம் தீட்டும் வேலையில் ஈடுபட்பிட்டு பிற்பகல் 2 மணிக்கு வெளியே வந்து பார்த்தபோது மோட்டர் சைக்கிள் திருட்டுபோயுள்ளது.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டையடுத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் விசேட புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைவாக சம்பவதினமான நேற்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் மோட்டர்சைக்கிளை திருடிச் சென்ற  3 பேரை கைது செய்ததுடன்; திருடிச் சென்று மோட்டர்சைக்கிளை பாகங்களாக கழற்றி விற்கும் காராச் ஒன்றில் இருந்து வாழைச்சேனை பகுதியில் நேற்று முன்தினம் திருட்டுப்போன மோட்டர்சைக்கிள் உட்பட 4 மோட்டர்சைக்கிள்களை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் 22, 28, 27 வயதுடைய பிறைந்துறைச்சேனையைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை இன்று வியாழக்கிழமை சம்மாந்துறை  நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.