சிறுவர் தின நிகழ்ச்சியும்; முதியோர்கள் கௌரவிப்பும்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்ச்சி நேற்று(03) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இதன்போது சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் ஆற்றுகை செய்யப்பட்டமையுடன், விளையாட்டுக்களும் நடைபெற்றன.

மேலும் அனைத்து சிறுவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமையுடன் அறிவாலயம் அறக்கட்டளையின் ஸ்தாபகர் அலையப்போடி நல்லரெத்தினம் அவர்களினால் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியின் போது, குறித்த கிராமத்தைச் சேர்ந்த இரு முதியோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிராமத்தின் உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.