மட்டக்களப்பில் இலஞ்ச ஊழல் தொடர்பான தகவல்களை வழங்ககோரி பொலிசார்  துண்டுபிரசும் பொது இடங்களில் ஓட்டி ஆரம்பித்துவைப்பு.

(கனகராசா சரவணன்)  மட்டக்களப்பில் அரச திணைக்களம் மற்றும் பாடசாலைகளில் இடம்பெறும் இலஞ்ச ஊழல் தொடர்பான தகவல்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வழங்குவற்கான தொலைபேசி இலக்கங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக துண்டுபிரசுரம் மக்கள் பார்வைக்காக அரச காரியாலயங்களில்  ஓட்டும் நடவடிக்கையை இன்று செவ்வாய்க்கிழமை (03) மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர் பண்டார பொலிஸ் நிலையத்தில் ஒட்டி ஆரம்பித்து வைத்தார்.

கடந்த 26ம் திகதி மட்டு சன்சயன் ஹோட்டலில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பான கலந்துரையாடலில் இலஞ்ச ஊழல் தொடர்பான தகவல்களை பொதுமக்கள்  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வழங்குவதற்கான தொலைபேசி இலக்கங்களை அரச காரியாலயங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படுத்துவற்கான துண்டுபிரசுரம் ஒட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது

இதற்கமைய கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  அஜித் ரோகன வின் ஆலோசனைக்கமைய மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர் பண்டாரவின் வழிகாட்டலில் பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.சதாத், சப்இன்பெக்டர் அன்புராஜ் தலைமையிலான பொலிசார் இலஞ்ச ஊழல் சம்மந்தமான அறிவுறுத்தல் எனும் தலைப்பிலான துண்டுபிரசுரம் ஒட்டும் நடவடிக்கை ஆரம்பித்தனர்.

இலஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் ஒப்பந்தம்  செய்வது தண்டனைக்குரிய குற்றம் 1994 ம் ஆண்டு 19 பிரிவின் இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படும். எனவே அரச அரச  சார்பற்ற நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் இலஞ்சம் பெறும்  அரச உத்தியோகத்தர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே இலஞ்ச ஊழல் தொடர்பான தகவல்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இல 38 மலசேகர மாவத்தை கொழும்பு 7 என்ற முகவரிக்கே அல்லது 0112586257, 0112584872, 0112586851, 0112596360 என்ற தொலைபேசி இலக்கம் ஊடகவே அல்லது 0112595045 என்ற தொலைநகல் ஊடகவே அல்லது யைடிழஉளூநரசநமய.டமஇ ளஉஉலளூளடவநெவ.டம  மின்னஞ்சல் ஊடாக தகவல்களை வழங்குமாறு கோட்டுக் கொண்டுள்ளதான துண்டுபிரசுரங்களை மண்முனைவடக்கு பிரதேச செயலாளார் பிரிவிலுள்ள 29 கிராம சேவர் காரியாலயங்களுக்கு முன் மக்கள் பார்வைக்கு ஓட்டுமாறு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவனிடம் துண்டுபிரசுரங்களை பொலிசார் கையளித்தனர்.