சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நடவடிக்கை.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)   மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ்  சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நடவடிக்கையானது (02) நேற்று மேற்கொள்ளப்பட்டது.

மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் அறிவுருத்தலுக்கமைய  “குரல் கொடுங்கள் பிள்ளைகளை காப்பாற்றுங்கள்” எனும் தொனிப்பொருளில்  விழிப்புணர்வு சுவர் ஒட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இதன் போது இலங்கை பொது போக்குவரத்து சபையின் வண்டிகளில் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்rதும் நோக்கில் மாவட்ட செயலக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவும் மண்முனை வடக்கு சிறுவர் பெண்கள் பிரிவும் இணைந்து இச் செயல் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.