சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு வீடுகள் பயனாளியிடம் கையளிப்பு.  

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி வீடமைப்பு லொத்தரில் 2023 மே மாத சீட்டிழுப்பில் வெற்றிபெற்ற பயனாளியின் வீடு புணரமைக்கும் நடவடிக்கைகள் பரவலாக இடம்பெற்று நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் இவ்வீடுகள் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் நேற்று (01) பயனாளியிடம் கையளிக்கப்பட்டன.இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. ரமீசா,தலைமை சமுர்த்தி முகாமையாளர் எஸ்.ஏ.எம். பசீ்ர்,சமூக  அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், பிரிவு உத்தியோகத்தர் ஏ.சி சாதிக்கீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.