ஒக்டோபர் 3ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழகம் திறந்த நாளாக பிரகடனம் : பொது மக்கள் பார்வையிட வாய்ப்பு

ஒக்டோபர் முதலாம் திகதி கிழக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 42வது ஆண்டு பூர்த்தியாகின்றது .இவ்வாரத்தினை கிழக்கு பல்கலைகழக வாரமாக அங்குரார்ப்பணம் செய்துள்ளது.

இதனை சிறப்பித்து பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில் ஒக்டோபர் 3ஆம் திகதி தொடக்கம் கிழக்குப்பல்கலைக்கழகம் திறந்த நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நாளில் மாணவர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள் யாவரும் வருகைதந்து பல்கலைக்கழகத்தின் நாளாந்த செயற்பாடுகளை அறிந்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தினம் முதன்முறையாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.