புதிய பணிப்பாளார் சபையினரை வரவேற்கும் நிகழ்வு.

(க.ருத்திரன்.)கிரான் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் நிலவும் பல்வேறுபட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவையுள்ளதாகவும் குறிப்பாக எரிபொருள் நிரப்பு நிலையத்தினை நவீனமயப்படுத்தல் கிராமிய வங்கி சேவையினை மேலும் மக்கள் மயப்படுத்தல். வெதுப்பக உணவுப் பண்டங்களின் உற்பத்திகளை அதிகரித்தில் மற்றும் விற்பனைகளை அதிகரித்தல் என பல்வேறுபட்ட விடயங்களை நிவர்த்தி செய்யவேண்டியுள்ளதாக கிரான் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய தலைவர் எ.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
 கூட்டுறவுச் சங்கத்தின் புதிய பணிப்பாளார் சபையினரை வரவேற்கும் நிகழ்வு இன்று (28) கிரானில் நடைபெற்றது.இந் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாறறும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வானது பல நோக்கு கூட்டுறவு சங்க பணியாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிந்தது.பழைய இயக்குனர் சபையின் பதவிக்காலம் முடிவடைந்ததால் புதிய இயக்குணர் சபையானது அண்மையில் தெரிவு செய்யப்பட்டிருந்தது..பொதுச் சபையில் 5 கிளைக் குழுக்களை கொண்டமைந்த உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்து போட்டியின்றி புதிய பணிப்பாளர் சபையினை தெரிவு செய்திருந்தனர்.அதில் அனுபவம் வாய்ந்த தலைவராக ஏ.பாலகிருஷ்ணன் என்பவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இவர்களே இன்று கலாச்சார ரீதியாக வரவேற்க்பட்டனர்.அவர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக ரீதியான பொறுப்பினை இன்று சம்பிரதாய பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
புதிய இயக்குனர் சபையானது பல்வேறு பட்ட அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக இதன்போது  தலைவர் மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு,கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் மதகுரு சிவஸ்ரீ மு.சண்முகம்,தலைமை காரியாலய பரிசோதகர் எம்.ஜ.எம்.உசனார்,சங்க கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் விஜேந்திரராஜா  ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2023-09-27 at 1.55.07 PM.jpegWhatsApp Image 2023-09-27 at 3.20.07 PM.jpegWhatsApp Image 2023-09-27 at 3.20.09 PM.jpeg