ஹிஸ்புழ்ழா வித்தியாலய முப்பது வருட   பூர்த்தி விழா.            

(ஏறாவூர் நிருபர் – நாஸர்)                                                                           மட்டக்களப்பு- ஏறாவூர்- ஐயங்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள    விசேட தேவையுடைய மாணவர்களை உள்ளடக்கிய       ஹிஸ்புழ்ழா வித்தியாலயத்தின் முப்பது வருடகால                 பூர்த்தியை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட முப்பெரும் விழா             வெகுசிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எச்எம்எம். பஷீர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தொழிலதிபர் றிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார்.
மறைந்த முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா மற்றும்             அவரது பாரியார் சப்றியா முஸ்தபா ஆகியோரின் நினைவாக இப்பாடசாலையில் புனரமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா , வகுப்பறைக்கட்டடம் ஆகிய கையளிப்பு , நன்கொடையாளர்கள் கௌரவிப்பு மற்றும் நூறு வறிய குடும்பங்களுக்கு                      பகல் உணவுப்பொதிகள் வழங்கல் ஆகிய மூன்று நிகழ்வுகள்            இதன்போது நடைபெற்றன. இவர்களுக்காக இங்கு விசேட பிரார்த்தனையும் நடைபெற்றது.
றிஸ்லி முஸ்தபா தனது சொந்த நிதியின் மூலமாக              புனரமைப்புப்பணிகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சுமார் முப்பது வருகாலப்பழைமை வாய்ந்த இப்பாடசாலை            எவ்வித அபிவிருத்தியுமின்றி புறக்கணிக்கப்பட்டிருந்தது.
இவ்வேளையில்  இங்கு பணியாற்றுவதற்கென                     விரும்பி இடமாற்றம்பெற்று வருகைதந்துள்ள சிரேஸ்ட ஆசிரியர்        எம்ஜிஏ. நாஸர் அவர்கள் நன்கொடையாளர்களின் அனுசரணையுடன் இப்பாடசாலையில்  ஒருவருடகாலத்தில்                          பௌதீக தேவைகளை  நிவர்த்திசெய்து                               மாணவர்களது  தேவைகளையும் பூர்த்திசெய்து                     தன்னிறைவடையச் செய்துள்ளார்.
இதனைப்பாராட்டி இந்நிகழ்வில் அந்த ஆசிரியர் பொன்னாடைபோர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
அத்துடன் கடந்த ஒருவருடகாலத்தில்  இப்பாடசாலையின் மேம்பாட்டிற்காக ஒத்துழைப்பு வழங்கிய  அனைத்து நன்கொடையாளர்களும்              இங்கு கௌரவிக்கப்பட்டனர்.                                    பாடசாலை மாணவர்களது கலைநிகழ்ச்சிகளும் இங்கு அரங்கேற்றப்பட்டன.
பிரதம அதிதி றிஸ்லி முஸ்தபா இங்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஆசிரியர் எம்ஏ. அப்துல் சுபுஹான் விழாவினை ஒழுங்கமைத்தார். வலயக்கல்விப்பணிமனையின் சார்பில் பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தரும் உதவிக்கல்விப் பணிப்பாளருமான எச்எம்எம். மாஜித் பங்கேற்றார்.

1.JPG7.JPG6.JPG8.JPG11.JPG18.JPG30.JPG33.JPG31.JPG34.JPG