உலக சுற்றுலா தின நிகழ்வு ஆரம்பித்து வைப்பு!

(ஹஸ்பர் ) உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் இணைந்து சுற்றுலா வாரத்துக்கான நிகழ்வுகளை நேற்று (27) திருகோணமலை Dutchbay கடற்கடையில் ஆரம்பமானது.
கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியக்தின் தவிசாளர் ஏ. பி.மதனவாசகன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றுலா வாரத்துக்கான நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இந்த ஆரம்ப நிகழ்வுக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரல, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் ,மாகாண உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 
 

IMG-20230928-WA0002.jpgIMG-20230928-WA0001.jpgIMG-20230928-WA0000.jpg