விஷர் நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்.

(எம்.எம்.றம்ஸீன்) இம் மாதம் 28 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள உலக நீர் வெறுப்பு நோய் தினத்தையொட்டி   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தொற்றுநோய் பிரிவு மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் இணைந்து விஷர் நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் .
 குறித்த நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.