மட்டக்களப்பில் கஞ்சாவுடன் கைது செய்த இளைஞர் ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபா அபதாரம்

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு நகா பகுதியில் 800 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞன் ஒருவரை 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று திங்கட்கிழமை (25) உத்தரவிட்டு தீர்பளித்துள்ளார்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (24) கருவப்பங்கேணி பிரதேசத்தில் மட்டு வாவிக்கரை வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரை 800 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட இளைஞனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது முதல்குற்றம் காரணமாக 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டு தீர்ப்பளித்தார் என்பது குறிப்பிடதக்கது.