அணிக்கு 4 பேர் கொண்ட கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ABC அணி வெற்றி

(அஸ்ஹர் இப்றாஹிம்)

முசலி சிலாவத்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ள தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு அணிக்கு 4 பேர் கொண்ட கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி வேப்பங்குளம் 4ம் கட்டை அல் ஹுதா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

மன்னார்,வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 38 அணிகள் குறித்த போட்டியில் பங்கேற்றிருந்ததுடன் இறுதிப் போட்டிக்கு அல் ஹுதா பீ அணியும் ,ஏபிஸி விளையாட்டுக் கழகமும் தெரிவாகி ஏபிஸி விளையாட்டுக் கழகம் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்கள் முதலாம், இரண்டாம், மற்றும் மூன்றாம் இடங்களை பெற்ற அணிகளுக்கான வெற்றிக்கிண்ணத்தையும் பணப்பரிசில்களையும் வழங்கி வைத்தார்.