வட்டமடு உள்ளிட்ட விவசாயக் காணிகள் விரைவில். அதாஉல்லா நம்பிக்கை

(ஏ.எஸ்.மெளலானா)

அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல் இருக்கும் வட்டமடு உள்ளிட்ட விவசாயக் காணிகள் மிக விரைவில் விடுவிக்கப்படும் என்று தேசிய காங்கிரஸ் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
வட்டமடு, பொத்துவில் மற்றும் சம்மாந்துறை போன்ற இடங்களில் உள்ள பல விவசாயக் காணிகள் நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்துள்ளன.

இக்காணிகளை விடுவிப்பதற்காக கடந்த பல மாதங்களாக பல தரப்பு மட்டத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க எடுக்கப்பட்ட பல கட்ட முயற்சிகளில் அதற்கு சாதகமாக செயல்பட்ட அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.