கைவிடப்பட்ட வீடுகளில் சமூக சீர்கேடுகள்-இஸ்லாமபாத் பகுதியில் சம்பவம்

(பாறுக் ஷிஹான்)
 
சுனாமி அனர்த்தம் காரணமாக மக்களினால் கைவிடப்பட்டுள்ள வீடுகளில் அண்மைக்காலமாக சமூக சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றன.
 
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக பகுதி முழு அளவில் பாதிக்கப்பட்ட வீடுகளில் இவ்வாறு சமூக சீர்கேடுகள் இடம்பெற்ற அடையாளங்கள் காணப்படுகின்றன.
 
குறிப்பாக வெளியிடங்களில் இருந்து வருகின்ற சிலரின் சட்டவிரோத செயற்பாடுகள் போதைப்பொருள் பாவனை பாலியல் செயற்பாடுகளுக்கு இவ்விடங்கள் உடந்தையாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
 
மேலும் குறித்த பகுதியில் இயங்கி வருகின்ற காதி நீதிமன்றத்தை சுற்றி காணப்படுகின்ற வீடுகள் யாவும் கைவிடப்பட்டு சுமார் 19 வருடங்களாக காடு மண்டி காணப்படுகின்றது.
 
குறித்த இவ்வாறான வீடுகளில் உள்ள அறைகளில் அரைகுறையாக பெண்களின் உள்ளாடை ஆண்களின் உள்ளாடை  என்பன சிதறி காணப்படுகின்றன.
 
போதைப்பொருள்  நுகர்ந்த இடமாகவும் இவ்வாறான வீடுகளில் அடையாளங்கள் தென்படுகின்றன
 
அத்துடன்  விச ஜந்துக்கள் விசப்பாம்புகளின் வாழிடங்களாகவும் இவ்வீடுகள் காணப்படுவதுடன் எவ்வித பாதுகாப்பற்ற இடமாகவும் விளங்குகின்றது.
 
இவ்வாறான கைவிடப்பட்ட வீடுகள் உரிய பராமரிப்புக்கள் இன்மையினால் அதன் அருகில் குடியேறி வாழும் மக்கள் கூட அச்சுறுத்தலினால் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
 
எனவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ்வீடுகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோதமான செயற்பாடுகளை  கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.