பாடசாலைகளில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்குகள்!

(வி.ரி. சகாதேவராஜா)    உலக  தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை வலய பாடசாலைகளில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை
விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றது.
 வைத்தியசாலையின் பணிப்பாளர்  வைத்திய கலாநிதி டாக்டர் இரா முரளீஸ்வரனின் வழிகாட்டலில்  கல்முனை கால்மேல் பாத்திமா  தேசிய  பாடசாலை, கல்முனை உவெஸ்லி தேசிய  பாடசாலை மற்றும் கல்முனை  இராமகிருஷ்ண மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் இக் கருத்தரங்குகள் முதற் கட்டமாக நடைபெற்றன.
 நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலையின் மனநல  பிரிவின்  சிரேஷ்ட  வைத்தியர் டாக்டர் யூ.எல். சராப்டீன் தாதிய உத்தியோகத்தர்களான அழகரட்ணம் ,திருமதி.நி.மனோஜினி மற்றும் பாடசாலை அதிபர்  ஆசிரியர்கள்  மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 வைத்தியசாலையின் மனநல  பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் டாக்டர் சராப்டீன் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் தற்கொலை உணர்வை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு உரையும் மன அழுத்த நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் வைத்தியசாலையை தொடர்பு கொள்ள வேண்டிய1926 என்ற தொலைபேசி இலக்கம் பற்றிய விழிப்புணர்வு கருத்துகள் தொடர்பாக உரையாற்றினார்.
 மனச்சோர்வு சம்மந்தமான மாணவர்களின் வினவிய சந்தேகங்களுக்கான விளக்கம் மற்றும் ,நிகழ்வு தொடர்பான ஆசிரியர்கள் மாணவர்களுடனான கலந்துரையாடல் இடம் பெற்றன.