மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வருடாந்த தேசிய இலக்கிய விழா நடைபெற்றது.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் தேசிய இலக்கிய விழா  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டுதலின் கீழ்  உதவி மாவட்ட செயலாளர் ஆ. நவேஸ்வரன் தலைமையில்  மாவட்ட செயலக  மாநாட்டு மண்டபத்தில் இன்று (20) இடம் பெற்றது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிற்கு உட்பட்ட  பாடசாலை களின் பாலர், சிறுவர், கனிஷ்ட, சிரேஷ்ட, அதி சிரேஷ்ட ஆகிய பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான வாய் மொழி மூலமான போட்டிகள் மூன்று மொழிகளிலும்  நடைபெற்றது.இதன் போது கதை கூறுதல், கிராமிய பாடல் இசைத்தல்,  கவி பாடல் போன்ற பல போட்டிகள்  இடம் பெற்றது.

இப்போட்டியில் தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்கள் தேசிய மட்டத்தில் தமது திறமையை வெளிப்படுத்தவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.