மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம்.

(பாறுக் ஷிஹான்)ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நாளை 2023.09.16 சாய்ந்தமருதில் நடைபெற இருக்கும் தலைவர் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தருவதை கண்டித்து இன்று சாய்ந்தமருதில் மாபெரும் கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.

இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.