மாணவர் பாராளுமன்ற தேர்தல்-2023

(பாறுக் ஷிஹான்) கல்வி அமைச்சின் புதிய சுற்று நிருபம் மற்றும் அறிவுறுத்தல் கோவையின் அடிப்படியில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் முறைமை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.இதனடிப்படையில் தேர்தல்கள் திணைக்களமும் கல்வியமைச்சும் இணைந்து பாடசாலைகள் தோறும் மாணவர் பாராளுமன்றங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட  அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் 2023ம் ஆண்டிற்கான மாணவர் பாராளுமன்றம் அமைப்பதற்கான வேட்பு மனுக்களை கோரப்பட்டு தெரிவுக்கான தேர்தல் இன்று(15)   பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைஸால் தலைமையில்   பாடசாலையில் வளாகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
காலை 8.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகி மு.ப 10.30 மணிக்கு முடிவடைந்தது.    மாணவர்கள் மிக அமைதியான முறையில் மிக நீண்ட வரிசைகளில் நின்று தமது வாக்குகளை ஆர்வமாக  பதிவு செய்து சென்றதனை காணக்கூடியதாக இருந்தது. அத்துடன் நடைபெற்ற பாடசாலை மாணவ தேர்தல் முறையானது தங்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தந்ததாகவும் இதன் மூலம்தேர்தல் தொடர்பான தங்களது அறிவையும் ஆளுமையையும் அதிகரிக்க முடிந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
தரம் 6 முதல் 13 வரையுள்ள மாணவர்களிலிருந்து தெரிவு செய்யப்படும் மாணவ பிரதிநிதிகளைக் கொண்டு மாணவர் பாராளுமன்றம் தாபிக்கப்படும்.இதில்  சபாநாயகர், பிரதமர், 10 அமைச்சர்கள், 10 பிரதி அமைச்சர்கள் என 95 மாணவ தலைவர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற இத்தேர்தலில் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்னும் நிலையத்திற்கு வந்தடைந்ததும் மு.ப   10.45  மணிக்கு வாக்கு எண்னும் பணிகள் ஆரம்பமாகியதுடன்  11.45  மணியவில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் விபரங்கள்   உத்தியோகபூர்வமாக  அறிவிக்கப்பட்டது.
மேலும் இத்தேர்தலில் மேற்பார்வையாளராக  வலயக்கல்வி அலுவலகத்தின் இணைப்பாளர் ஆசிரிய ஆலோசகர் பி.பி.எம் மஹ்ரூப் கலந்து கொண்டதுடன்   அதிபரும் மாணவர் பாராளுமன்ற தேர்தல் ஆணையாளருமான எம்.எஸ்.எம். பைஸால் மேற்பார்வையில் நடைபெற்ற இத்தேர்தலில் பிரதி அதிபர்  பிரதி தேர்தல் ஆணையாளராகவும் பிரதி அதிபர் உள்ளிட்ட    ஆசிரியர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.
மேலும்  தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக திட்டமிடப்பட்டு மிகவும் நேர்த்தியான முறையில் அனைத்து தேர்தல் பணிகளும் செய்து முடிக்கப்பட்டமையைக் காணக்கூடியதாக இருந்தது.
பாடசாலை மாணவர்களுக்கு ஜனநாயகமும்  அதன் பொறுப்புக்களும் ,வாக்கு உரிமை,வாக்களித்தல் ஆகிவற்றின் முக்கியத்துவம் பற்றியும் செய்முறை அறிவை பெற்றுக்கொள்வதுடன் ஜனநாயக ஆட்சி முறைமை,வாழ்க்கை முறைமையே அனுபவங்களுடாக தெளிவுபடுத்தி கொள்வதற்கான சந்தர்ப்பத்தை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் வலயம்,மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் உருவாக்கப்படும் மாணவர் பாராளுமன்றத்தின் அடிப்படை நோக்கமாக பாடசாலை மாணவர்கள் பல்வேறு அனுபவங்களை பெற்றுக்கொளவதற்கான செயல்பாடாக தற்போது பாடசாலை வலய மட்டத்தில்,மற்றும் மாகாண மட்டத்தில் கல்வி அமைச்சின் புதிய சுற்று நிருபம் மற்றும் அறிவுறுத்தல் கோவையின் அடிப்படியில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.