அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல்

ம.கிரிசாந்-
அம்பாறை மாவட்ட  ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, அக்கரைப்பற்று கமு/திகோ/இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்றத் தேர்தல் நேற்றய தினம் (13.09.2023) செவ்வாய் கிழமை பாடசாலை அதிபர் திருமதி.ரவிலேகா நித்தியானந்தன் அவர்களின் தலைமையில் மிகவும் நேர்த்தியான முறையில் இடம்பெற்றது.

குறித்த 2023 ஆம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்றத் தேர்தல் மூலமாக சபாநாயகர், பிரதமர், 10 அமைச்சர்கள், 10 பிரதியமைச்சர்கள் உட்பட மொத்தம் 95 மாணவப்பாராளுமன்ற பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டதுடன்.

மாணவர்கள் மத்தியில் தலைமைத்துவத் திறன்களை விருத்தி செய்தல், ஜனநாயகத்தின் அடிப்படை எண்ணக்கருக்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு தொடர்பான பரந்த புரிந்துணர்வை வழங்குதல் போன்ற மாணவர்களுக்கு நன்மை பயக்கும் நோக்கங்களுக்காக மாணவர் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.