பேராசிரியர் மௌனகுரு முன்னிலையில் சுவாமிகளின் திருவுருவப்பட பிரசுரம் வெளியீடு

வி.ரி.சகாதேவராஜா)
 கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ் மௌனகுரு முன்னிலையில் சுவாமிகளின் திருவுருவப்பட பிரசுரம் வெளியிட்டு வைக்கப்பட்டன.
இலங்கை ராமகிருஷ்ண மிஷினின் மட்டக்களப்பு மாவட்ட கிளை  பிரசுரித்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவப்படமும் மட்டக்களப்பு இகிமிசனின் முன்னாள் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்தா ஜீ மகராஜின்  திருவுருவப்படமும் வெளியிடப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் ஆச்சிரமத்தின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் இப்பிரசுரங்களை வெளியிட்டு வைத்தார்.
காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணி மன்ற ஆலோசகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா  மற்றும் முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.