ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பவில்லை.

(வாஸ் கூஞ்ஞ)  தலைமன்னாரிலிருந்து மீன்பிடியில் ஈடுபடுவதற்காக ஒரு படகில் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பவில்லை. இவர்களைத் தேடிச் சென்ற படகுகளில் இரண்டு கடல் கொந்தளிப்பு மற்றும் கடும் காற்றின் காரணமாக கச்சத்தீவல் தரித்து நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரிய வருவதாவது

செவ்வாய் கிழமை (12) மாலை 07.30 மணியளவில் தலைமன்னார் கிராமம் கடற்கரையிலிருந்து வட கடலில் இரு மீனவர்கள் ஒரு படகில் வலிச்சல் மூலம் மீன்பிடிக்காகச் சென்றுள்ளனர்.

ஆனால் இவர்கள் வழமையாக கரை திரும்பும் நேரத்தில் கரை திரும்பாததால் இப் பகுதி மீனவர்கள் கடலில் இவர்களை தேடுவதில் ஈடபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை (13) மாலை வரை இவர்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தேடிச் சென்ற படகுகளில் இரு படகுகள் காற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக உடன் கரை திரும்ப முடியாத நிலையில் கச்சத்தீவில் தரித்து நிற்பாகத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன இரு மீனவர்களும் தலைமன்னார் ஊர்மனையைச் சேர்ந்தவர்கள் எனவும் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான டிலக்ஸ் கூஞ்ஞ என்பவரும்

மற்றையவரும் இதே இடத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுமித்திரன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.