குறித்த மணல் வீதியானது சில வருடங்களுக்கு முன்பதாக மூங்கிலாற்றின் அரிப்பு காரணமாக சேதமடைந்துள்ள நிலையில் குறித்த வீதியானது சேதமடைந்தமை தொடர்பாக அரசியல் வாதிகள்,அரச அதிகாரிகள் வரைக்கும் தெரியப்படுத்திய நிலையில் குறித்த வீதியின் புனரமைப்பு தொடர்பாக எதுவிதமான நடவடிக்கையினையும் முன்னெடுக்க வில்லை என்பது மக்களின் ஆதங்மமாகும்.
பருவ மழைக்கான காலம் அண்மித்துள்ள நிலையில் வீதியின் சேதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.வீதியின் திருத்த வேலைகள் துரிதமாக முன்னெடுக்கப்படாத சந்தர்ப்பத்தில் ஆற்றின் அரிப்பு காரணமாக பெருமளவான நெற் செய்கை நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய துன்பகரமான நிலைமை உருவாகும் என பொது அமைப்புக்கள் சுட்டிக் காட்டுகின்றன.
பூச்சிக்கூட்டுக் கிராமமானது மட்டு அம்பாரை மாவட்டங்களை எல்லைப்படுத்துகின்ற தனி தமிழ்க் கிராமமாகக் காணப்பட்டமையினால் கடந்த கால போர்ச் சூழலின் போது பெருமளவான அழிவுகளை எதிர் கொண்ட கிராமமாகும்.இக்கிராமமானது யானைகள் செறிந்து வாழ்கின்ற பிரதேசமாகக் காணப்படுகின்றமையால் தினமும் யானைகளின் தாக்கத்திற்கும் இக் கிராம மக்கள் உட்படுவதாக குறிப்பிடுகின்றனர்.
பூச்சிக்கூட்டுக் கிராம மக்களினதும், விவசாய செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற விவசாயிகளின் நலனினையும் கருத்திற் கொண்டு வீதியின் புனரமைப்பு தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
|