ஐஸ் ஏற்றி வந்த  கெப் தடம் புரண்டது! கல்முனையில் சம்பவம்.

(வி.ரி. சகாதேவராஜா)   கல்முனை பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த ஐஸ் ஏற்றிய கெப் வாகனம் நேற்று(12) செவ்வாய்க்கிழமை அதிகாலை தடம்புரண்டது.
 கல்முனை பாண்டிருப்பு பிரபல தியேட்டர் ஒன்றுக்கு முன்னாள் உள்ள வளைவிலே இந்த விபத்து ஏற்பட்டது.
கெப் வாகனத்தின் பின் சக்கரம் வெடித்து இந்த விபத்து இடம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தடம் புரண்டதால்  நிறைய  ஐஸ் கட்டிகள் வீதி எங்கும் சிதறின. இதனால் போக்குவரத்து ஒரு சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
 இதே வேலளை வாகனத்தின் சாரதியும் காப்பாளரும்  சிறு காயங்களுக்கு உள்ளாகி அருகில் உள்ள கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள் .
கல்முனை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.